ஆஸ்திரேலியா முழுவதும் புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவிவருகின்றது என சுகாதாரதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
என்பி 1.8.1. வகை கொரோனா தொற்றே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் குறித்த வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே, வயோதிபர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அலை தோற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.