விக்டோரியாவில் நான்கு ஆண்கள்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய 24 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெய்ன்ஸ்டேலில் 15 நிமிட காலப்பகுதிக்குள்ளேயே நான்கு இடங்களில் இவர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.
வூல்வொர்த்ஸ் பல்பொருள் அங்காடி, துரித உணவு விற்பனை நிலையத்தின் கார் நிறுத்துமிடம், ஹோட்டல் மற்றும் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் வைத்தே அவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இரவு 10 மணியளவில் அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த நான்கு ஆண்களில் மூவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
தாக்குதல் நடத்திய பெண்ணை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.