ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், நாளை 03 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
இவ்விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருணா ஜயசேகர உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் அவர் ஈடுப்பட உள்ளார்.
அத்துடன், லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் இடம்பெறவுள்ள சிறப்பு நிகழ்வில் ‘ ஆஸ்திரேலியா மற்றும் இந்திய பெருங்கடல்’ என்ற தலைப்பிலும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் உரையாற்றவுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் ரிச்சர்ட் மார்லஸ், சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு பேரவையின் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
ஆசிய நாடுகளுக்குரிய ஆஸி. துணை பிரதமரின் பயணம் இன்று ஆரம்பமாகின்றது.