பாதுகாப்பு செலவை அதிகரிக்குமாறு அமெரிக்கா அழுத்தம்: கன்பரா மறுப்பு!
ஆஸ்திரேலியா தனது பாதுகாப்பு செலவினங்களை ஆண்டுக்கு 40 பில்லியன் டாலர்கள் அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் பதற்ற நிலை அதிகரித்துவரும் சூழ்நிலையிலேயே கன்பராவிடம், வாஷிங்டன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.
இந்தோ, பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவை ஆதரிக்க ஆஸ்திரேலியா இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நடந்த ஷாங்கரி-லா உரையாடலின் போது, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
எனினும், தமது நாட்டுக்குரிய பாதுகாப்பு செலவீனங்களை ஆஸ்திரேலியாவே தீர்மானிக்கும், அதற்கு பிற அழுத்தங்கள் தேவையில்லை எனவும் பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்துள்ளார்.
ஜி - 7 தலைவர்கள் உச்சி மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை கனடாவில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்கவரும் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து இது குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சபா.தயாபரன்.