டார்வினில் குடும்ப வன்முறையால் தாக்குதலுக்கு இலக்கான 22 வயது யுவதி உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் 10 நாட்கள் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையிலேயே அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.