அடிலெய்டுவிலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் சிறுவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 5 மணியளவிலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
16, 27 மற்றும் 31 வயது இளைஞர்களே வெட்டுக்காயங்களுக்கு இலக்காகியுள்ளனர் எனவும், இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரியவருகின்றது.
இது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.