கிறீன்ஸ் கட்சியின் மேற்கு ஆஸ்திரேலிய செனட்டரான டோரிண்டா காக்ஸ், லேபர் கட்சி பக்கம் தாவியுள்ளார். இவரின் கட்சி தாவல் பெடரல் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டு லிடியா தோர்ப் கிறீன்ஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் அக்கட்சியில் பூர்வக்குடி உறுப்பினராகவும், கட்சியின் பழங்குடி விவகார செய்தித் தொடர்பாளராகவும் டோரிண்டா காக்ஸ் செயற்பட்டார்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு கிறீன்ஸ் கட்சிக்குரிய புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான உள்ளக வாக்கெடுப்பில் செனட்டர் காக்ஸ் தோல்வியடைந்திருந்தார்.
இதனால் செனட்டர் காக்ஸ் அதிருப்தி அடைந்திருந்தார் எனவும், அவர் கட்சி தாவுவதற்கு இதுவே பிரதான காரணம் எனவும் கூறப்படுகின்றது.
பாலஸ்தீன விவகாரம் தொடர்பில் லேபர் கட்சியில் இருந்து செனட்டன் பாத்திமா பேமன் விலகி இருந்தார். இந்நிலையில் கட்சி மாறும் இரண்டாவது செனட்டர் இவராவார்.
சப.தயாபரன்