ஆஸ்திரேலிய துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
அவருடன் 15 பேர் கொண்ட குழுவினரும் வருகை தந்துள்ளனர்.
வருகை தந்த தூதுக்குழுவினரை விமான நிலையத்தில் உள்ள விசேட விருந்தினர்களுக்கான ஓய்வறையில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல, இலங்கை வெளிவிவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் குழு வரவேற்றனர்.
ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் அவரது தூதுக்குழுவும், நாட்டில் தங்கள் உத்தியோகபூர்வ பணிகளை முடித்துக்கொண்டு, இன்று செவ்வாய்க்கிழமை (3) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட உள்ளனர்.
ஜனாதிபதி அநுர, பிரதமர் ஹரினி அமரசூரிய , வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சு நடத்தவுள்ளனர்.