ஆஸ்திரேலியா, சிட்னிக்குள் போதைப்பொருள் கடத்த முற்பட்ட கும்பலின் தலைவர் உட்பட ஏழு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கனடா, வான்கூவரில் இருந்து கடந்த வருடம் சிட்னிக்கு இறக்கமதி செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டிக்குள் இருந்து 280 கிலோ ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இதனையடுத்து இதனை இறக்குமதி செய்ய முற்பட்ட 42 வயது நபரொருவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டன. அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், 17 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
பெடரல் பொலிஸார், எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புகள் இணைந்தே இதற்குரிய நடவடிக்கையில் இறங்கின.