டாஸ்மேனிய பிரீமியருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் டீன் வின்டர் தயாராகிவருகின்றார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதற்கு பல உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.
டாஸ்மேனிய நாடாளுமன்றத்தில் பாதீட்டு விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், பிரீமியர் ஜெர்மி ராக்லிப் தலைமையிலான அரசாங்கம்மீது நம்பிக்கையில்லை என சுட்டிக்காட்டி இருந்தார்.
மாநில வரலாற்றிலேயே மிகவும் மோசமான பாதீடு முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சாடியுள்ளார்.
லேபர் கட்சியே டாஸ்மேனியாவில் எதிரணியாக உள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமெனில் கிறீன்ஸ் மற்றும் சுயாதீன உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். அந்த ஆதரவு கிடைக்குமா என்பது இன்னும் உறுதியாக தெரியவரவில்லை.