சிட்னிக்கு பெருந்தொகையான சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் போதைப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்ட பிரதான சூத்திரதாரி சிக்கியுள்ளார்.
42 வயதான குர்விந்தர் சிங் என்பவரே பிரதான மூளையாளியாக செயற்பட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்பட்சத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என சட்டத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பனாமாவிலிருந்து 50 கிலோ கொக்கைன் போதைப்பொருள், ஐக்கிய அரபு அமீகரகத்தில் இருந்து 20 மில்லியன் சிகரெட்டுகள் மற்றும் கனடாவில் இருந்து 280 கிலோ ஐஸ் போதைப்பொருளை இவர் கடத்தியுள்ளார் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். பெடரல் பொலிஸார், எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புகள் இணைந்தே நீண்டநாட்களாக இது பற்றி விசாரித்துவந்த நிலையில், சூத்திரதாரிகள் சிக்கியுள்ளனர்.