ஆஸ்திரேலியாவின் பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் 0.2 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் 0.6 சதவீதமாக இருந்த காலாண்டு பொருளாதார வளர்ச்சி, ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மந்தமடைந்து - பின்னடைவைச் சந்தித்துள்ளது.
2017 செப்டம்பர் காலாண்டிற்குப் பிறகு பொதுச் செலவு வளர்ச்சியிலிருந்து மிகப்பெரிய குறைப்பை பொருளாதாரம் பதிவு செய்துள்ளது என்று பொருளாதார நிபுணர் கேத்தரின் கீனன் சுட்டிக்காட்டினார்.
காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணிகள் உள்நாட்டுக்குரிய தேவை மற்றும் ஏற்றுமதியைக் குறைத்தன. சுரங்கம், சுற்றுலா மற்றும் கப்பல் போக்குவரத்து என்பவற்றிலும் காலநிலை மாற்றம் தாக்கல் செலுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய மத்திய வங்கி அதன் சமீபத்திய பொருளாதார அறிக்கையில், ஜூன் காலாண்டின் இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1.8 சதவீதமாக இருக்கும் என்றும், இது இந்த ஆண்டு இறுதிக்குள் 2.1 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது.
சபா.தயாபரன்