சிட்னி பிராட்பீல்ட் தொகுதிக்கான மறுவாக்கு எண்ணிக்கையில் சுயேச்சை வேட்பாளர் நிக்கோலெட் போய்ல் வெற்றிபெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிபரல் கட்சி வேட்பாளர் கிசெல் கப்டேரியனைவிட 26 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளார்.
கப்டேரியன் லிபரல் கட்சியில் வளர்ந்துவரும் பெண் நட்சத்திரமாக விளங்குகிறார். தற்போதைய கட்சி தலைவர் சூசன் லேயின் நம்பிக்கைக்குரிய நபராகவும் திகழ்கின்றார்.
லிபரல் கட்சியின் தகவல் தொடர்பு துறையில் அவருக்கு முக்கிய பதவிகூட வழங்கப்பட்டுள்ளது. மறு வாக்கு எண்ணிக்கை முடிவு தொடர்பில் ஏதேனும் ஆட்சபனை இருந்தால் லிபரல் கட்சி நீதிமன்றத்தை நாட முடியும். அதற்கு 40 நாட்கள் அவகாசம் உள்ளது. அது பற்றி அக்கட்சி பரிசீலித்துவருகின்றது.
முதல் சுற்றில் கிசெல் கப்டேரியனே வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது.