குயின்ஸ்லாந்தில் காணாமல்போயிருந்த 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
34 வயதான ஜேம்ஸ் வுட் மற்றும் 33 வயதான டானிகா ப்ரோம்லி ஆகியோரெ நேற்றிரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பியோ பிஷப் என்ற 17 வயது சிறுமியே கடந்த மே 15 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார்.
விமானத்தில் பயணிப்பதற்கு அவர் ஆசனம் ஒதுக்கி இருந்தாலும் அன்றைய தினம் அவர் பயணிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. விமான நிலையம் நோக்கி அவர் சென்றார் எனக் கூறப்படும் காரை மட்டுமே பொலிஸார் மீட்டுள்ளனர்.
அவரை தேடுவதற்குரிய தேடுதல் வேட்டையை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
சிறுமி தங்கி இருந்த வீட்டின் உரிமையாளரும், அவரது துணையும் இணைந்தே கொலை செய்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
கொலை செய்யப்பட்டுள்ள சிறுமியின் சடலம் இன்னும் மீட்கப்படவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.