ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை குறிவைத்து நியூ சவூத் வேல்ஸ் பொலிஸாரால் சிட்னியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் வேட்டையின்போது ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களவாடப்பட்ட காரொன்றுடன் நேற்றிரவு 15 வயது சிறுவன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். அதன்பிறகு இச்சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுவர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனத் தெரியவருகின்றது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்குரிய பொலிஸாரின் தேடுதல் வேட்டை தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.