ஈராக்கில் சிறை வைக்கப்பட்ட ஆஸ்திரேலியர் விடுவிப்பு!
ஈராக்கில் நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய பிரஜையொருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
49 வயதான ரொபட் பீதர் எனும் ஆஸ்திரேலியருக்கும், அவரது எகிப்து சகாவான கலீத் ஜாக்லுல் ஆகியோருக்கு மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் 2021 ஆம் ஆண்டில் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், 18 மில்லியன் டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஈராக்கின் மத்திய வங்கியின் புதிய தலைமையகத்தைக் கட்டும் திட்டத்தின் போது இவர்கள்; பணியாற்றிய நிறுவனம், ஈராக் அரசாங்கத்தை ஏமாற்றியது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தாலும் அவர்கள் ஈராக்கை விட்டு வெளியேற முடியாது எனத் தெரியவருகின்றது.
ஆஸ்திரேலியர் விடுவிக்கப்பட்டுள்ளதை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் வரவேற்றுள்ளார்.