கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 17 வயது சிறுமியான பியோ பிஷப்பின் சடலத்தை தேடும் நடவடிக்கையின்போது, மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த மனித எச்சங்கள், மேற்படி சிறுமியினதா என்பதை உறுதிப்படுத்த சிறிது காலம் தேவையென குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.
குட் நைட் ஸ்க்ரப் தேசிய பூங்காவிற்கு அருகில் அடர்ந்த புதர்களால் சூழப்பட்ட பின்புற சாலை பகுதியிலேயே இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை தொடர்பில் தடயவியல் விசாரணை நடக்கின்றது.
காணாமல்போயிருந்த பியோ பிஷப் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
34 வயதான ஜேம்ஸ் வுட் மற்றும் 33 வயதான டானிகா ப்ரோம்லி ஆகியோரெ நேற்றி முன்தினம் இரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பியோ பிஷப் என்ற 17 வயது சிறுமியே கடந்த மே 15 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.