சிட்னியில் நடந்த குடும்ப நிகழ்வொன்றின்போது ஏற்பட்ட மோதலின்போது மேற்கொள்ளப்பட்;ட கத்திக்குத்து மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
17 வயது சிறுவன் ஒருவரும், 18 வயது இளைஞர் ஒருவருமே இவ்வாறு காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐவரடங்கிய குழுவொன்றே இவர்கள்மீது தாக்குதல் நடத்தியுள்ளது எனக் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. நேற்று இரவுவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.