அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வெடித்த கலவரத்தால், புலம்பெயர்ந்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிராகவும், புலம்பெயர்ந்தோரை வெளியேற்றக்கூடாது என வலியுறுத்தியும் அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு காலத்தில் சிறந்த அமெரிக்க நகரமாக இருந்த லாஸ் ஏஞ்சல்ஸ், சட்டவிரோத குடியேறிகளாலும், குற்றவாளிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.” – என்று ட்ரம்ப் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் உத்தரவிட்டு உள்ளேன். லாஸ் ஏஸ்சல்ஸில் சட்டம் ஒழுங்கு மீட்டெடுக்கப்படும். சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப் படுவார்கள். அவர்களின் பிடியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் விடுவிக்கப்படும்.” – எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நேற்று நடைபெற்ற பாரிய போராட்டம் தொடர்பில் நேரடி செய்தியை வழங்கிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய பெண் நிருபர் ஒருவர்மீது , படையினர் பயன்படுத்திய ரப்பர் தோட்டா பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் நேரலையில் பதிவாகி இருந்தது.
இச்சம்பவம் ஆஸ்திரேலிய அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஊடகவியலாளரை இலக்கு வைத்தே சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும், இது தொடர்பில் அமெரிக்காவிடம் ஆஸ்திரேலியா விளக்கம் கோர வேண்டும் எனவும் கிறீன்ஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.