மருத்துவ அவசரநிலை காரணமாக லண்டனில் இருந்து சிங்கப்பூர் செனற QF2 குவாண்டாஸ் விமானம் அஜர்பைஜானில் உள்ள பாகுவுக்கு திருப்பி விடப்பட்டு, ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஹெய்தர் அலியேவ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
60 வயதுடைய ஒரு பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் விமானம் திருப்பி விடப்பட்டதாக ஆஸ்திரேலிய மருத்துவரும் பயணியுமான ஹமிஷ் உர்குஹார்ட் கூறினார்.
பாகுவில் உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்க விமானி 180 பாகையில் விமானத்தைத் திருப்ப வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்
அஜர்பைஜானில் இரவு முழுவதும் சிக்கித் தவிக்கும் 500 பிரயாணிகள் சிங்கப்பூருக்கு செவ்வாய்க்கிழமை காலை மாற்று விமானத்தில் ஏறுவார்கள் என்று குவாண்டாஸ் விமான தரப்பில் கூறப்பட்டாலும் " மாற்று விமானத்தைப் பெறுவதற்கு எந்த உதவியும் இல்லை என்றும் விமான நிலைய ஊழியர்கள் மாற்று விமானத்திற்கு பணம் செலுத்துமாறு எங்களிடம் கேட்கிறார்கள்," எனறு பிரயாணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சபா.தயாபரன்.