செயற்கை கருதரிப்பு மையமான மொனாஷ் ஐ.வி.எப்பின் தலைமை நிர்வாகி பதவி விலகியுள்ளார்.
தவறான கரு பரிமாற்றம் தொடர்பில் எழுந்த இரண்டாவது சர்ச்சை சம்பவத்தையடுத்தே அவர் பதவி விலகியுள்ளார்.
மைக்கேல் க்னாக் 2019 ஆம் ஆண்டு முதல் மொனாஷ் ஐ.வி.எப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிவருகின்றார்.
கடந்த ஜுன் 5 ஆம் திகதி நோயாளி ஒருவருக்கு தவறான கரு மாற்றப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
பிரிஸ்பேனில் இரண்டு மாதங்களுக்கு முன்னரும் இதேபோன்றதொரு தவறு இடம்பெற்றுள்ளது.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.
அதேவேளை, புதிய தலைமை அதிகாரியாக மாலிக் ஜெய்னுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி மையத்தில் அவர் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றிவந்துள்ளார்.