சிட்னி தென்மேற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 9.20 மணியளவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
வீட்டில் எவரும் இருக்கவில்லை. இதனையடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதன்போது செஸ்டர் ஹில்லில் எரிந்து கொண்டிருந்த காரொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் மூவர் வாகனமொன்றில் தப்பிச்செல்ல முற்படுகையில் அவர்கள் சிக்கியுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற வீடானது, பாதாள குழு உறுப்பினர் ஒருவருக்குரியது என தெரியவருகின்றது. அவர் பரமட்டா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி இருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.