பிரதமர் அந்தோனி அல்பானீஸி தலைமையிலான லேபர் அரசு, முன்கூட்டியே இரட்டை கலைப்பு (Double Dissolution) முறையில் தேர்தலுக்கு செல்லலாம் என தெரியவருகின்றது.
முக்கிய மூன்று சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு செனட்சபை மறுப்பு தெரிவித்துவரும் நிலையிலேயே இம்முடிவு எடுக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள இரு சபைகளையும் ஒரே தடவையில் கலைத்துவிடப்படுகின்றமைதான் இரட்டைக் கலைப்பு எனப்படுகின்றது.
தொகுதிவாரியாக தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கீழ்சபையும், மாநில அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட செனட்டர்களைக்கொண்ட மேல்சபையுமே இவ்வாறு கலைக்கப்படவுள்ளது.
கிறீன்ஸ் கட்சியினரும், செனட்டர்களும் சட்டமூலங்களுக்கு அங்கீகாரம் வழங்கும்பட்சத்தில் இரட்டைக் கலைப்பு நிலையை தவிர்க்ககூடியதாக இருக்கும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்துள்ளார்.
பிரதமரால் முன்வைக்கப்படும் கோரிக்கையின் பிரகாரம் இரட்டைக் கலைப்புக்குரிய முடிவை ஆளுநர் நாயகம் எடுப்பார்.