ஆண்-பெண் பாலின இடைவெளியில் 146 நாடுகளில் ஆஸ்திரேலியா 13 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025 வெளியாகி உள்ளது. 146 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஆஸ்திரேலியா 13-வது இடத்தைப் பிடித்துள்ளது.
பாலின இடைவெளி குறியீடு நான்கு முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பாலின சமத்துவம் அளவிடுகிறது. ஒன்று, பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு, இரண்டு, கல்வி மூன்று, சுகாதாரம் மற்றும் உயிர்வாழ்வு, நான்கு, அரசியல் அதிகாரமளித்தல்.
உலகளாவிய பாலின இடைவெளி 68.8 சதவீதமாக குறைந்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. ஐஸ்லாந்து தொடர்ந்து 16-வது ஆண்டாக தரவரிசையில் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து பின்லாந்து, நார்வே, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.