இந்தோனேசியா, பாலியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. விசாரணை நடைபெற்றுவருகின்றது.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குரிய தூதரக உதவிகளை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு செய்துகொடுத்துள்ளது.