பிரிஸ்பேனின் தெற்மேற்கு பகுதியில் இலகுரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் விமானி படுகாயம் அடைந்துள்ளார்.
இன்று முற்பகல் 11 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
50 வயது மதிக்கத்தக்க விமானி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என தெரியவருகின்றது.
விபத்தின்போது விமானி மட்டுமே விமானத்தில் இருந்துள்ளார்.