ஆஸ்திரேலியாவில் இவ்வருடம் கடந்துள்ள 8 மாதங்களில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இன்று குடியுரிமை தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையிலேயே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்தை சேர்ந்தவர்களே ஆஸ்திரேலியாவில் அதிகமாக குடியுரிமை பெற்றுள்ளனர் எனவும், இரண்டாவது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
இவ்வருடம் ஆகஸ்ட் 31 ஆம் திகதிவரை ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றவர்களில் 13. 51 சதவீதமானோர் இந்தியர்களாவர்.
ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான நியூசிலாந்தைச் சேர்;ந்த 16 ஆயிரம் பேருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 2003, 2024 நிதியாண்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரம் புலம்பெயர்ந்தோருக்கு ஆஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.