மூன்று வயது வளர்ப்பு மகளை சித்திரவதை செய்து கொலை செய்தார் எனக் கூறப்படும் நபர் குற்றவாளியென அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கான தீர்ப்பு நாளை மறுதினம் வழங்கப்படவுள்ளது.
2020 இல் பிரிஸ்பேனுக்கு மேற்கு பகுதியில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயாரும், அவரின் துணையென கருதப்படும் நபரும் கைது செய்யப்பட்டனர்.
குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்தனர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை அவர்கள் மறுத்திருந்தனர்.
எனினும், இது தொடர்பான வழக்கு விசாரணையில் சிறுமி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
சிறுமியின் தாய்க்கு ஏற்கனவே 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. செப்டம்பர் 23 ஆம் திகதி அவர் பிணைக்கு விண்ணப்பிக்க முடியும். அவரின் துணை தொடர்பான தீர்ப்பு நாளை மறுதினம் வழங்கப்படவுள்ளது.