கன்பரா வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தீ விபத்து சந்தேகத்துக்கிடமானதாகக் கருதப்படுகின்றது.
தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்திருந்தாலும் நபரை காப்பாற்ற முடியாமல்போனது. தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றபோதிலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.