சிட்னி மேற்கு பகுதியில் அடுக்குமாடி கட்டத்திலிருந்து ஆணொருவரும், பெண்ணும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இன்று காலை முதலில் ஆணின் சடலத்தை பொலிஸார் மீட்டனர், பின்னர் கத்திக் குத்து காயங்களுடன் பெண்ணொருவரின் சடலமும் காணப்பட்டுள்ளது.
இது சந்தேகத்துக்கிடமான மரணமாகக் கருதப்படுகின்றது. இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனரா அல்லது குடும்ப வன்முறையால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகள் தொடர்கின்றன.