ஒருங்கமைப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள குழு உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கு செயலியொன்றை தயாரித்தார் எனக் கூறப்படும் நபரொருவர் பெடரல் பொலிஸாரால் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான ஆஸ்திரேலிய பிரஜையான என்பவரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு பலகோணங்களில் விசாரிக்கப்பட்டுவருகின்றார்.
2022 ஆம் ஆண்டு குறித்த செயலி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸார் விசேட விசாரணைiயை ஆரம்பித்திருந்தனர். இதன் விளைவாகவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளன.
இதன் பின்னணியில் செயற்படும் மேலும் ஐம்பது பேர்வரை கைது செய்யப்படவுள்ளனர்.
நேற்றுவரை 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இதில் பெரும்பாலானவர்கள் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சர்வதேச ரீதியில் செயற்படும் பாதாள குழு உறுப்பினர்கள் இச்செயலியை பயன்படுத்தியுள்ளனர் என தெரியவருகின்றது.