ஆஸ்திரேலியாவில் அடிப்படை பணவீக்கம், மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவடைந்துள்ளது.
இதனால் ரொக்க வட்டி வீதமும் மத்திய வங்கியால் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், மாதாந்த நுகர்வோர் விலைக் குறியீடு மே மாதம் 2.1 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 2.4 சதவீதமாக இருந்தது.
ஆஸ்திரேலிய மத்திய வங்கி எதிர்வரும் 7 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது ரொக்க வட்டி வீதம் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.