நியூ சவூத் வேல்ஸ்க்கு 1.5 தொன் கொக்கைன் போதைப்பொருள் இறக்குமதி செய்ய முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23, 24 மற்றும் 34 வயதுடைய மூன்று இளைஞர்களே கைது செய்யப்பட்டு, அவர்கள்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதன் பின்புலத்தில் இருக்கும் குழு தொடர்பிலும் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.