குயின்ஸ்லாந்து, Gold Coast பகுதியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் 60 வயது முதியவர் ஒருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று மதியம் ஒரு மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.தாக்குதல் நடத்திய நபர் தப்பியோடியுள்ளார்.
காயமடைந்த முதியவர் அவரச சேவை பிரிவினரின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை இடம்பெறுகின்றது.