பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கைது செய்யப்படும்போது காயமடைந்த முன்னாள் கிறீன்ஸ் வேட்பாளர் ஹன்னா தாமஸ் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிட்னி தென்மேற்கு பகுதியிலேயே நேற்று இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் முற்படுகையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதன்போதே ஹன்னா தாமஸின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. 35 வயதான அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
ஹன்னா தாமஸ், கூட்டாட்சி தேர்தலின்போது கிரேண்ட்லர் தொகுதியில் பிரதமர் அந்தோனி அல்பானீஸியை எதிர்த்து, கிறீன்ஸ் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார்.
அவரின் கண் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.