சமூகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் சில புகலிடக்கோரிக்கையாளர்களை சிறையில் அடைக்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டங்கள் தோல்வியடைந்துள்ளன என்பதை குடிவரவு அமைச்சர் டோனி பர்க் ஒப்புக்கொண்டுள்ளார்.
புகலிடக்கோரிக்கையாளர்களை நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைப்பது சட்டவிரோதம் என உயர்நீதிமன்றம் 2023 இல் தீர்ப்பளித்திருந்தது.
இதனையடுத்து சமூகப்பாதுகாப்பை கருத்திற்கொண்டு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கணுக்கால் வலயம் மற்றும் ஊரடங்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
எனினும், உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் கடும் அதிருப்தியிலேயே இருக்கின்றது.
இந்நிலையில் மாற்று ஏற்பாடுகள் பற்றி ஆராயப்பட்டுவருகின்றது எனவும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.