குவாட் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இன்று அமெரிக்கா பறந்தார்.
குறித்த மாநாடு நாளை ஆரம்பமாகின்றது.
குவாட் அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குரிய கூட்டணியாகவே இது கருதப்படுகின்றது.
இவ்விஜயத்தின்போது அமெரிக்க வெளிவிவகார அமைச்சருடன், ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இரு தரப்பு பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் கலந்துரையாடுவதற்கு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.