அமெரிக்காவின் ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் கிடையாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று அறிவித்தார்.
இருவருக்கும் இடையில் மரியாதை நிமித்தமான உறவு நீடிப்பதாகவும், விரைவில் சந்திப்பு இடம்பெறவுள்ளது எனவும் அவர் கூறினார்.
கனடாவில் நடைபெற்ற ஜி - 7 மாநாட்டின்போது ட்ரம்ப்பை பிரதமர் அல்பானீஸி சந்திக்கவிருந்தார். எனினும், மத்திய கிழக்கு போர் சூழ்நிலையால் அச்சந்திப்பு நடக்கவில்லை.
அத்துடன், நேட்டோ மாநாட்டிலும் பிரதமர் அல்பானீஸி பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலியாவின் சார்பில் பாதுகாப்பு அமைச்சரே பங்கேற்றிருந்தார்.
ட்ரம்புடனான முரண்பாடு காரணமாகவே சந்திப்புகளை ஆஸி. பிரதமர் தவிர்த்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே முரண்பாடு இல்லை என பிரதமர் கூறினார்.
ஜனாதிபதி ட்ரம்புடன் எப்போது சந்திப்பு நடக்கும் என்ற கால எல்லையை பிரதமர் குறிப்பிடவில்லை. எனினும், சந்திப்பு நடப்பது உறுதி என அவர் அறிவித்தார்.