சிட்னி வடக்கு கடற்கரை பகுதியில் காரொன்று மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
நேற்றிரவு 10.45 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கார் மரத்தில் மோதிய பின்னர் அது தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயணைப்பு பிரிவினரும், அவசர சேவை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
எனினும், 23 வயதான சாரதியும், 26 வயது பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.