ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், காசா முனையில் நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
இதன் மூலம் இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆயிரத்து 575 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, காசாவில் மேற்கு கரையை கைப்பற்றும் நகர்வுகளிலும் இஸ்ரேல் ஈடுபட்டுவருகின்றது. இதற்கு அரபுலகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் பாலஸ்தீன மக்களின் அபிலாஷைகளையும், தன்னை பாதுகாத்தக்கொள்வதற்கு இஸ்ரேலுக்கு உள்ள உரிமையையும் ஆஸ்திரேலியா அங்கீகரிக்கின்றது என பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று தெரிவித்தார்.
இப்பிரச்சினைக்கு இரு நாடுகள் தீர்வு முன்மொழிவு ஏற்கப்பட வேண்டும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.