தென் சீனக் கடற்பகுதியில் சீனாவின் இராணுவக் குவிப்பு தொடர்பில் ஆஸ்திரேலியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், இந்தோ - பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம் மிக முக்கியம் என்று ஆஸி. வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் கூறினார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி நாளை சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனா மற்றும் ஆஸ்திரேலியா தலைவர்களுக்கிடையிலான இரு தரப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காகவே பிரதமர் கன்பரா செல்கின்றார். சீன ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியான் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு மலேயாவில் நடைபெற்றுவருகின்றது. இதன்போது இந்தோ - பசுபிக் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி வெளிவிவகார அமைச்சர் உரையாற்றினார்.
அவ்வேளையிலேயே தென் சீனக் கடல் விவகாரம் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'இந்தோ-பசிபிக்கின் மூலோபாய ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்காவின் இருப்பு மிகவும் முக்கியமானது, மேலும் அதன் அனைத்து நாடுகளும் தங்கள் சொந்த இறையாண்மை நலன்களுக்காக தேர்வுகளைச் செய்யும் திறனை வலுப்படுத்துகிறது." எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், காலநிலை மாற்றம், உலக சுகாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களைத் தீர்க்க உதவுவதில் சீனாவின் ஈடுபாடு மிக முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தென் சீனக் கடல மற்றும் தைவான் ஜலசந்திக்கு அப்பால் சீனாவுடன் இராணுவ மோதலை நாடுவதில்லை. ஆதிக்கத்தையே எதிர்க்கின்றோம் என பெனிவோங் மேலும் குறிப்பிட்டார்.