மெல்பேர்ண் கிழக்கில் நடந்த கார் விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
91 வயதான மூதாட்டி ஒருவரே விபத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் சிறுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மூதாட்டி ஓட்டிவந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மூன்று பேர் மீது மோதியுள்ளது எனவும், பின்னர் வேலி வழியாகச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலேயே 59 வயது பெண் உயிரிழந்தார். 60 வயது ஆணும் இரண்டு வயது சிறுவனும் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளனர்.