ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட சிட்னி முன்னாள் கவுன்சிலர் நிக் ஆடம்ஸை, மலேசியாவுக்கான தமது நாட்டு தூதுவராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரப்ம் நியமித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் ஒருவரை திட்டிய விவகாரம் தொடர்பிலேயே அவர் லிபரல் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த அறிவித்தல் அவருக்கு செல்வதற்கு முன்னதாகவே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டார்.
அதன்பின்னர் அவர் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு அறக்கட்டளையொன்றை நடத்தினார். அதேபோல ஊடக செயற்பாடுகளிலும் ஈடுபட்டார்.
40 வயதான ஆடம்ஸ் சிட்னி பல்கலைக்கழகத்தில் தகவல் ஊடகத்துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
அவரை தூதுவர் பதவிக்கு ட்ரம்ப் நியமித்திருந்தாலும் செனட் ஒப்புதல் அளித்தால் நியமனம் உறுதியாகும்.
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போருக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதால் அந்நாட்டுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆடம்ஸை தூதுவராக ட்ரம்ப் களமிறங்குகின்றார்.