இயந்திர உபகரணத்துக்குள் மறைத்து ஆஸ்திரேலியாவுக்கு 62 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கடத்திய நபர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
29 வயதான குறித்த நபர் விசாரணைகளின் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அடிலெட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
2025 பெப்ரவரி மாதமே, ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரால் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இயந்திர உபகரணத்துக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 62 பொட்டலங்கள் மீட்கப்பட்டன. அதற்குள் போதைப்பொருள் இருந்துள்ளது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக இரு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவை நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
2021 முதல் 2022 வரை ஆஸ்திரேலியாவில் கொக்கைன் பாவனையால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 300 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.