ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பு மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.
ஆசியான் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றுவருகின்றது.
இம்மாநாட்டின்போதே இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், பிரச்சினைகளுக்கு இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காணவும் இணக்கத்துக்கு வந்துள்ளனர்.
அதேபோல ஆஸ்திரேலிய பிரதமரின் சீன விஜயம் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.
பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று சீனா நோக்கி பயணமாகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஜப்பான், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும், ஆஸி. வெளிவிவகார அமைச்சர் இரு தரப்பு பேச்சுகளில் ஈடுபட்டார்.