மெல்பேர்ணில் கார் திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஆறு சிறார்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாரதியை தாக்கிவிட்டு, ஆயுத முனையிலேயே அவரது வாகனத்தை இவர்கள் கடத்தியுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்ட பின்னர் விசாரணை வேட்டை துவங்கியது.
ஹோட்டலொன்றுக்கு அருகில் குறித்த வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதை பொலிஸார் அவதானித்தனர். அதன் அருகே செல்ல முற்பட்டபோது வாகன கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தப்பிச்செல்ல முற்பட்டனர்.
இதன்போது பொலிஸ் வாகனம் மற்றும் மேலும் ஒரு வாகனத்துடன் அவ்வாகனம் மோதியுள்ளது. சம்பவ இடத்திலேயே அறுவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
15 மற்றும் 16 வயதுகளுடைய குறித்த சிறார்கள், சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.