மெல்பேர்ண் தென்கிழக்கில் இன்று அதிகாலை வாகனமொன்று களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஓக்லீ தெற்கில் உள்ள டிங்லி பைபாஸ் அருகிலேயே அதிகாலை 3 மணியளவில் கறுப்பு ஜீப் இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டது.
வாகனத்தை ஓட்டிச்சென்ற 27 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.