சிட்னியில் 17 மாதக் குழந்தையை தாக்கினர் எனக் கூறப்படும் சிறார் பராமரிப்பு நிலைய பெண் ஊழியர்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26 ஆம் திகதி தெற்கு வென்ட்வொர்த்வில்லில் உள்ள ஆரம்பக் கற்றல் மையத்தில் 17 மாதக் குழந்தைக்கு காயம் ஏற்பட்டிருந்தமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த காயங்கள், இரு சிறார் பராமரிப்பு நிலைய ஊழியர்களால் தனித்தனி சந்தர்ப்பங்களில் ஏற்றப்பட்டதாக பொலிஸார் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் இரு பெண்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
உடல் ரீதியில் தீங்கு விளைவித்தால், தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
32 மற்றும் 47 வயதுடைய இரு பெண்களும் எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.