இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் துலிப் சமரவீரவுக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெண் வீரரிடம் தகாத முறையில் நடத்துகொண்டார் என்பது உட்பட தகாத நடத்தை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பணியாற்ற இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்காக 1993 முதல் 1995 வரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சமரவீர நீண்டகாலமாக விக்டோரியாவின் பெண்கள் அணியினதும், மெல்பேர்ன் ஸ்டார் டபிள்யூ பிபிஎல்லின் பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்த பின்னர் விக்டோரியா பெண்கள் அணியின் சிரேஸ்ட பயிற்றுவிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டார்.
எனினும், இரண்டு வாரங்கள் மாத்திரமே அந்த பதவியை வகித்த நிலையில் அவர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.