குயின்ஸ்லாந்து, பிரிஸ்பேனில் இலகுரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.
நேற்று மாலைவேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சோதனை நடவடிக்கையின்போதே இவ்வனர்ந்தம் இடம்பெற்றுள்ளது.
விமானியும், துணை விமானியும் மாத்திரமே பயணித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானம் 35 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டது எனவும், கடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் பயன்பாட்டில் உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை இடம்பெறுகின்றது.
சபா.தயாபரன்